ரயிலில், மொபைல் திருடிய 23 வயது இளைஞர்- சந்தேகநபர் ஈரோடில் கைது!
டீ கார்டன் விரைவு ரயில் ஈரோடு ரயில்வே நிலையத்தில் நின்றபோது, பயணியில் மொபைல் போன் காணாமல் போனது.;
மொபைல் திருட்டு வழக்கு - ரயிலில் பயணித்த பயணியிடம் திருடியவர் ஈரோடில் கைது :
ஈரோடு: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அன்டோ (வயது 62) என்பவர் நாகப்பட்டினம் - ரஞ்சலகுடா இடையே இயக்கப்படும் டீ கார்டன் விரைவு ரயிலில் சென்றார். ரயில் ஈரோடு ரயில்வே நிலையத்தில் நின்றபோது, அவரது மொபைல் போன் காணாமல் போனது.
இதையடுத்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஈரோடு-பவானிசாலை பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது.
பயணத்தின்போதும் பாதுகாப்பு அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டும் சம்பவம் இது.