காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் ஓட்டம் நிறைவு
15,743 ஏக்கர் நிலங்களுக்கு, காலிங்கராயன் தடுப்பணையின் வாயிலாக தண்ணீர் வழங்கப்பட்டது;
காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு முடிவுக்கு வந்தது
ஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன்பாளையம் முதல் ஆவுடையார்பாறை வரை பரவலாகப் பாசனம் செய்து வரும் 15,743 ஏக்கர் நிலங்களுக்கு, காலிங்கராயன் தடுப்பணையின் வாயிலாக தண்ணீர் வழங்கப்பட்டது. இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட முக்கியமான விவசாயப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இரண்டாம் போகத்திற்காக கடந்த டிசம்பர் 25-இல் தொடங்கிய தண்ணீர் திறப்பு, 120 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு, ஏப்ரல் 30 அன்று நிறைவடைந்தது. தற்போது, வாய்க்காலில் தண்ணீர் வடிந்து கொண்டு இருக்கிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தண்ணீர் முறையாக வழங்கப்பட்டதால், இரண்டாம் போகத்திற்கான பாசனம் முடிந்தது.
தண்ணீர் முழுவதும் வடிந்ததும், வாய்க்காலை தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும்.
பாதிக்கப்பட்ட மதகுகள் மற்றும் பாலங்கள் சீரமைக்கப்படும்.
கலெக்டர் உத்தரவின்படி, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேபி கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.