கோபியில், வாகன வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

(ஆர்.சி. புத்தகம்) தபால் மூலம் அனுப்பப்படும் முறையை ரத்து செய்து, நேரில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வாகன வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update: 2025-04-30 05:00 GMT

கோபியில் வாகன வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் 

கோபி: புதிய போக்குவரத்து விதிமுறைகளின் கீழ், வாகனங்களின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி. புத்தகம்) தபால் மூலமாக அனுப்பப்படும் முறையை ரத்து செய்து, பழைய முறையின்படி நேரில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோபியில் வாகன வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டம், ஈரோடு மாவட்ட அனைத்து மோட்டார் வாகன வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் சிவா முன்னிலை வகித்தார்.

கோபி, பவானி, சத்தி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வாகன வியாபாரிகள் கலந்து கொண்டு உரிமைக்கான கோரிக்கையை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News