மின் சேவை குறைகளை தீர்க்க பயனீட்டாளர் கூட்டம்

பயனீட்டாளர்கள் மின் சேவை கோரிக்கைகளை மனுவாக வழங்கி, உடனடி தீர்வுகளைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது;

Update: 2025-04-15 10:10 GMT

ஈரோடு மின் பகிர்மான வட்டம் சார்பாக, மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், பெருந்துறை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் (கருமாண்டிசெல்லிபாளையம், செனடோரியம், பெருந்துறை) நடைபெற உள்ளது.

பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம் மற்றும் நல்லாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களது மின் சேவை குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி, உடனடி தீர்வுகளைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News