ஈரோடு மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்தில் முன்னேற்றம்
இந்த திட்டத்தின் கீழ், 30, 49, 50, 56, 57, 58 என்ற ஆறு வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் விநியோகம் தரும் முயற்சி நடைபெற்று வருகிறது.;
ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணியில் முன்னேற்றம்
ஈரோடு மாநகராட்சியில், குடிநீர் தேவையை முறையாக தீர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் ‘அம்ரூத் 2.0’ திட்டத்தில், தற்போது 35 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ், 30, 49, 50, 56, 57, 58 என்ற ஆறு வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் விநியோகம் தரும் முயற்சி நடைபெற்று வருகிறது. ₹20.47 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் பணியில், 18.17 கி.மீ நீளத்தில் புதிய குடிநீர் குழாய்கள், 1,605 புதிய வீட்டு இணைப்புகள், மற்றும் 23,620 பழைய இணைப்புகள் என மொத்தமாக 25,225 குடும்பங்களுக்கு 24 மணி நேர குடிநீர் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், மேல்நிலை தொட்டிகளில் நீர் மட்டம் குறையாது, மின் செலவீனமும் குறையும். மேலும், நீங்கள் பயன்படுத்தும் நீர் அளவுக்கு ஏற்ப மீட்டர் வசூல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. திட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமை அடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.