டிபாசிட் வாங்கி 15 லட்சம் ரூபாய் மோசடி
டிபாஸிடாக வாங்கிய பணத்தை முகநூலில் விளம்பரம் செய்து மோசடி செய்த இருவர் கைது;
டிபாசிட் வாங்கி ரூ.15 லட்சம் மோசடி - நிதி நிறுவனம் நடத்திய 2 பேர் கைது
ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த 34 வயதான ஆனந்த் மற்றும் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 34 வயதான செல்வராஜ் ஆகியோர் கடந்த ஆண்டு பள்ளப்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள் "நிதி நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை" என்ற விளம்பரத்தை முகநூலில் வெளியிட்டனர்.
இந்த விளம்பரத்தைப் பார்த்து வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பலர் வேலை தேடி வந்தனர். அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஆனால் வேலையில் சேர்ப்பதற்கு முன் டிபாசிட் தொகை செலுத்த வேண்டும் என ஆனந்த் மற்றும் செல்வராஜ் கூறினர். இதை நம்பி அந்த 9 பேரும் மொத்தமாக 15 லட்சம் ரூபாய் செலுத்தினர். ஆனால் அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து 6 மாதங்களுக்கு முன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் நேற்று ஆனந்த் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.