மருந்தாளுனர் தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி வகுப்பு

சேலத்தில் மருந்தாளுனர் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.;

Update: 2025-04-10 08:50 GMT

மருந்தாளுனர் போட்டித்தேர்வு இலவச பயிற்சி தொடக்கம்

மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 425 மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 10 வரை பெறப்பட்டன. இந்தப் போட்டித் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் மணி பேசுகையில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கப்படும். தேர்வு நாள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேவைக்கேற்ப பயிற்சி வகுப்புகளின் நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நடப்புத் தேர்வுக்குப் பதிவு செய்துள்ள 142 பேரில் 49 பேர் நேற்று தொடங்கிய முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News