கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் விழா
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழாவாள் நாளை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கபட்டுள்ளது;
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் விழா நாளை நடைபெறுகிறது – போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
அனுப்பர்பாளையம் அருகே உள்ள பெருமாநல்லூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்திர குண்டம் திருவிழா, கடந்த ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை (ஏப்ரல் 8) அதிகாலை பக்தர்கள் தீ குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அதே நாளன்று மாலை தேர் உற்சவமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கு ஈரோடு, திருப்பூர், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவிடுவதால், போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்ற விவரம்:
ஈரோடு மற்றும் கோபி வழியாக திருப்பூர் செல்லும் வாகனங்கள், விவசாயிகள் நினைவு ஸ்தூபியிலிருந்து நெருப்பெரிச்சல், பூலுவபட்டி வழியாக செல்ல வேண்டும்.
திருப்பூரிலிருந்து ஈரோடு, கோபி நோக்கிச் செல்லும் வாகனங்கள், பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், கணக்கம்பாளையம் வழியாக விவசாயி ஸ்தூபி செல்லவேண்டும்.
இந்த மாற்றங்கள் ஏப்ரல் 7 மதியம் முதல் 8ம் தேதி இரவு வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு திட்டமிட்டு பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.