ஈரோட்டில் ஜவுளி விற்பனை குறைவு
தற்போது விழா, முகூர்த்த சீசன் இல்லாததால் மொத்த விற்பனை குறைந்துவிட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்;
ஈரோட்டில் நேற்று முன்தினமும் நேற்று இரவுவரை நடைபெற்ற வாரச்சந்தைகளில் ஜவுளி விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
வியாபாரிகள் தெரிவித்ததாவது: கடந்த வாரங்கள் வரை கோவில் திருவிழாக்கள், முகூர்த்த நாள்கள் இருந்ததால் ஜவுளி விற்பனை வேகமாக இருந்தது. ஆனால் தற்போது விழா, முகூர்த்த சீசன் இல்லாததால் மொத்த விற்பனை குறைந்துவிட்டது.
அதே நேரத்தில், கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் ஜவுளி வாங்கியுள்ளனர். குறிப்பாக காட்டன் மற்றும் காட்டன் மிக்ஸ் வகை ஜவுளிகளில் ஆண் மற்றும் பெண்களுக்கான சட்டை, பேன்ட், லுங்கி, நைட்டி, டி-ஷர்ட், பனியன், ஜட்டி, இரவுக்கால ஆடைகள், துண்டு, வேட்டி, டிரவுசர் போன்றவை சில்லறையாக அதிகளவில் விற்பனையாகியுள்ளன.