சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி

கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிதந்தால் அருவியில் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்த பொதுமக்கள்;

Update: 2025-04-07 10:20 GMT

கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி – அருவியில் மகிழ்ச்சியுடன் பொழுது கழித்த மக்கள்

கோபி: கோபி அருகே அமைந்துள்ள கொடிவேரி அணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று காலை ஆற்றில் நீரின் வரத்து குறைந்து, 306 கன அடியாக சரிந்தது. இந்நிலையில், பாதுகாப்பு நிலைமைகள் பரிசீலிக்கப்பட்டதின் பிறகு, காலை 8:30 மணி முதல் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணையில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News