வீட்டு பீரோவை உடைத்து நகை திருடிய மூவர் கைது

உறவினர் வீட்டில் நகை திருடிய மூவர் கைது செய்யபட்டனர்;

Update: 2025-04-24 09:00 GMT

நகை திருடிய 3 பேர் சிக்கினர்

கெங்கவல்லி: தலைவாசல், சாத்தப்பாடியைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேலின் மனைவி சந்திரா (67), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர்களது வீட்டில், கடந்த 21-ம் தேதி மேற்கூரை ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, 6 பவுன் நகையைத் திருடிச் சென்றனர். கெங்கவல்லி காவல்துறையினர் விசாரணையில், சந்திராவின் தங்கையின் பேரன் தயாநிதி (22), அவரது நண்பர் மணிகண்டன் (27), தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த சதீஷ் (25) ஆகியோர் திருடியது தெரியவந்தது. அவர்கள் திருடிய நகையை அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மூவரையும் காவல்துறையினர் கைது செய்து, நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News