யூடியூப் பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த இளைஞர் – மாணவிக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் !

சமூகத்தில் இது பெரும் விவாதத்தையும், இளைஞர்-இளம்பெண்களின் வாழ்கை நடைமுறை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளது.;

Update: 2025-05-14 06:50 GMT

 யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த இளைஞர் – மாணவிக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் :

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவியொருவர் தன் குடும்பத்திடம் கல்லூரியில் படிப்பதாக கூறிவிட்டு, ஒரு இளைஞருடன் தங்கியிருப்பது போன்ற சம்பவம் அதிருச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட போது, அந்த இளைஞர் யூடியூப் வீடியோக்கள் பார்த்து பிரசவ உதவி செய்துள்ளார். ஆனால் அதிக ரத்தப்போக்கு காரணமாக, மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, உண்மை தெரிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சமூகத்தில் இது பெரும் விவாதத்தையும், இளைஞர்-இளம்பெண்களின் வாழ்கை நடைமுறை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

Tags:    

Similar News