சாதனையை நோக்கி திண்டல் மாணவர்களின் ஆர்வம்
இந்நிகழ்ச்சி, மாணவர்கள் நடுநிலைப்பள்ளி கல்வியிலிருந்து தொழில்நுட்ப உலகுக்குள் முன்னேறுவதற்கான முயற்சியாக அமைந்தது;
ஈரோடு அருகிலுள்ள திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில், மிகச் சிறப்பாக 'சாதனையாளர் தினம்' கொண்டாடப்பட்டது. இதில், முக்கிய விருந்தினராக சென்னை வேக்கன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனிதவள பொது மேலாளர் சரத்சந்தர் பங்கேற்று மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கினார்.
தனது உரையில், சமூக வட்டங்களில் (Social Circles) ஈடுபடுவதும், ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் (Online Certification Courses) மூலம் தொழில்துறைத் திறன்களை மேம்படுத்துவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கினார். மேலும், வடிவமைத்தல் (Design) மொழிகள், 'No-code Platforms' போன்ற சமீபத்திய டிஜிட்டல் வளர்ச்சிப் போக்குகளை மாணவர்களுடன் பகிர்ந்தார். நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய வேலை வாய்ப்புகளில் தீவிரமாக பங்கேற்க மாணவர்களை ஊக்குவித்தார்.
விழாவில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வள்ளுவன் வரவேற்புரை நிகழ்த்தினார். வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர் தலைமை ஏற்றார். கல்லூரியின் முதல்வர் ஜெயராமன் ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா, டீன், நிர்வாக மேலாளர் பெரியசாமி, அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.