வீட்டில் சைக்கிளை திருட முயன்றவரை மக்கள் பிடித்தனர்

சைக்கிள் திருட முயன்ற திருடன் மக்கள் வலைவீச்சில் சிக்கினார், ஏற்கனவே திருடிய மொபைல் போனும் மீட்பு;

Update: 2025-05-15 05:40 GMT

சைக்கிள் திருட முயன்ற திருடன் மக்கள் வலைவீச்சில் சிக்கினார் – மொபைல் போனும் மீட்பு

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 60) என்பவரது சைக்கிளை, நேற்று மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இந்த செயலைக் கண்டு உணர்ந்த பொதுமக்கள்  அவனை சுற்றிவளைத்து பிடித்து, அம்மாபேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிக்குட்டையைச் சேர்ந்த சின்ன ராஜா (வயது 37) என தெரியவந்தது. மேலும், அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த கணபதி (வயது 51) என்பவரது வீட்டில், கடந்த இரவு திருடப்பட்ட மொபைல் போனும் சின்ன ராஜா தான் திருடியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காரிப்பட்டி போலீசார் சின்ன ராஜாவை கைது செய்து, மொபைல் போனை மீட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

Tags:    

Similar News