லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

அரசுப் பணியில் லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் பெற்றதற்கும் இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்;

Update: 2025-04-25 05:00 GMT

ஈரோடு கோர்ட்டில் லஞ்ச வழக்கில் தீர்ப்பு – பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

ஈரோடு மாவட்டத்தில், கட்டட அனுமதி சான்று வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மற்றொரு நபருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு, அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வராஜ், கட்டட அனுமதி சான்று பெறுவதற்காக, அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, அப்போதைய செயல் அலுவலர் கார்த்திகேயன், டேங்க் ஆப்பரேட்டர் கோபால் மூலம், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டு இருந்தார்.

செல்வராஜ் பணம் கொடுக்க விரும்பாததால், அவர் ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்படி, 2012, டிசம்பர் 14-ஆம் தேதி, செல்வராஜ், ஊழல் தடுப்பு போலீசாரின் கையாண்டு, பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மற்றும் கோபாலிடம் 5,000 ரூபாய் வழங்கினார். பணம் பெற்ற இருவரையும் அந்த நாளில் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஈரோடு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி ராமசந்திரன், நேற்று தீர்ப்பை வழங்கியபோது, அரசுப் பணியில் லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் பெற்றதற்கும் இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

Tags:    

Similar News