21 ஆண்டுகளாக பட்டாக்காக காத்திருக்கிறோம் மக்களுக்கு ஏமாற்றம்

எங்கள் பெயரில் விரைவில் பட்டா மாற்றம் செய்து, நியாயமான உரிமையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மனுவில் வலியுறுத்தினர்.;

Update: 2025-05-06 05:50 GMT

பட்டா மாற்றம் வேண்டி 21 ஆண்டுகளாக ஏங்கும் மக்கள்:

ஈரோடு மாவட்டம் காசிபாளையம், ரங்கம் பாளையம், அன்னை சத்யா நகர், இரணியன் வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வலியுறுத்தினர்.

அவர்கள் கூறியதாவது:

காசிபாளையம் பகுதியில் உள்ள புல எண் 584 மற்றும் 598 ஆகிய நிலங்கள், நத்தம் நிலமாக வகைப்படுத்தப்பட்டு, அதன் பிறகு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் மூலம் பலருக்கு பட்டா வழங்கப்பட்டும், 21 ஆண்டுகள் கழிந்தும், நாங்கள் பெயரில் பட்டா பெற முடியாமல் தவிக்கிறோம்.

நாங்கள் அந்த இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இருப்பினும், அரசின் 'தமிழ்நிலம்' கணினி தளத்தில், இன்று வரைக்கும் அந்த நிலம் 'அரசு நிலம்' எனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வீடு கட்டவோ, கடன் பெறவோ முடியாத நிலை உள்ளது.

எங்கள் பெயரில் விரைவில் பட்டா மாற்றம் செய்து, நியாயமான உரிமையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மனுவில் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News