பசுமை பாதையில் படையெடுத்த மாணவர்கள்
இச் சுற்றுப்பயணம் மாணவர்களுக்கு அறிவையும், பசுமை விழிப்புணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டனர்;
காங்கேயத்தில் கால்நடை ஆராய்ச்சி மையத்தை நேரில் பார்வையிட்ட வேளாண் மாணவர்கள்
காங்கேயம் அருகேயுள்ள ஆப்பக்கூடல் தனியார் வேளாண் கல்லூரியின் மாணவ, மாணவியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்காக சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு கல்விச் சுற்றுப்பயணமாக வந்தனர்.
இந்த பயணத்தின் போது, மாணவர்கள் காங்கேயம் இனம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம், பராமரிப்பு, வளர்ப்பு முறை மற்றும் இயற்கை வேளாண்மையின் பலன்கள் குறித்து விரிவாக அறிந்தனர். மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி நேரில் மாணவர்களுடன் உரையாடி, இந்த மாதிரியான பயணங்கள் இயற்கையை புரிந்து கொள்ளும் அறிவையும், பசுமை விழிப்புணர்வையும் இளைய தலைமுறையினருக்குள் விதைப்பதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என குறிப்பிட்டார்.