ஏலச்சீட்டு மோசடி! ஒரே குடும்பம் ஒரு கோடி மோசடி!பைனான்ஸ் தொழிலாளியின் நாடகம் வெடித்தது!
பெரியசேமூரை சேர்ந்த பாலு மற்றும் குமாரிடம் ₹7.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், மேலும் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் ₹1 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர்.;
ஏலச்சீட்டு மோசடி: தலைமை குற்றவாளி அழகர்சாமி நீதிமன்றத்தில் சரணடைப்பு – போலீஸ் கஸ்டடிக்கு விண்ணப்பம் :
ஈரோடு: ஈரோடு கொங்கம்பாளையத்தை சேர்ந்த பைனான்ஸ் தொழிலாளி அழகர்சாமி (46) மற்றும் அவரது மகள் மாரியம்மாள் (26) நடத்திய ஏலச்சீட்டு மோசடியில், பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
பெரியசேமூரை சேர்ந்த பாலு மற்றும் குமாரிடம் ₹7.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், மேலும் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் ₹1 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளனர்.
மகள் மாரியம்மாள் பிப்ரவரி 10ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அழகர்சாமி சமீபத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், போலீசார் அவரை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோர உள்ளனர்.