ஈரோட்டில் காய்கறி விலை உயர்வு

ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி சந்தையில் காய்கறி விலை திடீரென உயரும் பரபரப்பு நிலவி வருகிறது.;

Update: 2025-05-05 06:40 GMT

ஈரோட்டில் காய்கறி விலை உயர்வு :

ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி சந்தையில் காய்கறி விலை திடீரென உயரும் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்கள் தினசரி விரும்பி வாங்கும் பீன்ஸ், கடந்த வாரத்தில் கிலோ ரூ.80க்கு விற்பனையாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.140க்கு ஏறியுள்ளது. அதேபோன்று பீட்ரூட் ரூ.50 இருந்து ரூ.80 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.40 இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:

கத்திரிக்காய் – ₹50

வெண்டைக்காய் – ₹30

பீர்க்கங்காய் – ₹60

புடலங்காய் – ₹30

முல்லங்கி – ₹30

பாகற்காய் – ₹60

சுரைக்காய் – ₹20

பட்ட அவரை – ₹70

கருப்பு அவரை – ₹90

கோவக்காய் – ₹30

முருங்கைக்காய் – ₹60

பச்சை மிளகாய் – ₹50

கேரட் – ₹75

இஞ்சி – ₹50

காலிபிளவர் – ₹40

முட்டைகோஸ் – ₹25

தக்காளி – ₹15

சின்ன வெங்காயம் – ₹35

பெரிய வெங்காயம் – ₹30

இந்த விலை உயர்வால் பொதுமக்கள் வியப்பில் உள்ளனர். இன்று வணிகர் தினத்தை முன்னிட்டு மார்க்கெட்டில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News