தண்ணீர் பற்றாக்குறையால் கிராமங்களில் மக்கள் பெரும் அவதி

மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் குடிநீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக மக்கள் கோரிக்கைகள் எழுந்துள்ளன;

Update: 2025-04-29 10:50 GMT

தண்ணீர் பற்றாக்குறையால் கிராமங்களில் மக்கள் பெரும் அவதி

கோடையின் கடும் வெப்பத்தால், திருப்பூர் மாவட்டத்தின் பல ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் குடிநீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால், வீடுகளில் குடிநீர் தேவையும் அதிகரித்து விட்டது. இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகளின் வினியோக திட்டங்களில் குழப்பம் ஏற்பட்டு, குறிப்பாக திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் குடிநீர் விநியோகத்தில் பெரிய அளவிலான தாமதம் மற்றும் குறைபாடுகள் பதிவாகி வருகின்றன.

முன்பு மக்கள் எதிர்பார்த்திருந்தபடி, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் பெறும் கூட்டுக்குடிநீர் திட்டம் தரமான நீர் வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையில், மூன்றாவது திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீரின் தரம் மோசமாக இருப்பதால், மக்கள் அதனை நிராகரிக்கின்றனர். மேலும் அனைத்து திட்டங்களின் தண்ணீரையும் ஒன்றிணைத்து விநியோகிப்பதால், பவானி ஆற்றின் நீர் தரமானதாக இல்லாமல் போய்விட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நெறிப்படி, ஊராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு ஒருவர் 55 லிட்டர் குடிநீர் பெற வேண்டியது அரசின் உத்தரவு. இருப்பினும், இந்த நடைமுறை திருப்பூரில் பின்பற்றப்படவில்லை. தற்போது, பெரும்பாலான கிராமங்களில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாகவும், தண்ணீர் கேட்டு போராட்ட நிலை உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News