த.வெ.க. சார்பில் இளநீர் சேவை
த.வெ.க சமூக சேவையில் முன்னிலை வகித்து நீர்மோர், தர்பூசணி பந்தல் அமைத்து பொதுபணியில் மக்களின் பாராட்டைப் பெற்றது;
அந்தியூர் பகுதியில் சுடச்சுட வெயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஈடுபாடுடன் சேவை செய்யும் நோக்கில், த.வெ.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் புதுப்பாளையம் – ஆத்தப்பம்பாளையம் சாலைப்பகுதியில், தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு த.வெ.க. கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகிக்க, மகளிர் அணி அமைப்பாளர் மாதேஸ்வரி பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
மேலும், மேற்கு ஒன்றிய செயலாளர் மாரசாமி, கிழக்கு துணைச் செயலாளர் சதீஸ், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தன்னலமின்றி சேவையில் ஈடுபட்டனர். இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.