ஆற்றில் குளிக்க சென்றவர் சுழலில் சிக்கி பரிதாபமாக பலி
பவானி அருகே தளவாய்பேட்டை பகுதியில், தீர்த்தம் எடுக்க சென்றவர்களில் ஒருவர், ஆற்றில் சுழல் பகுதிக்கு இடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
பவானி ஆற்றில் குளிக்க சென்றவர் சுழலில் சிக்கி பலி – தீயணைப்பு துறையினர் மீட்டனர் :
பவானி அருகே தளவாய்பேட்டை பகுதியில், தீர்த்தம் எடுக்க சென்றவர்களில் ஒருவர், ஆற்றில் சுழல் பகுதிக்கு இடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை அருகே உள்ள குளத்துப்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர்கள், மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நிமித்தமாக டாட்டா ஏஸ் வாகனத்தில் நேற்று மாலை பவானி ஆற்றிற்கு தீர்த்தம் எடுக்க சென்றனர்.
அங்கு தர்மலிங்கம் (வயது 35) என்பவர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தூண்களுக்கு இடையேயான சுழல் பகுதியில் சிக்கி மூழ்கியுள்ளார்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர சிரமத்தின் பின்னர், அவரது உடலை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பினர். பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.