சேலத்தில் மாநில சாப்ட் டென்னிஸ் தொடக்கம்
தமிழ்நாடு – மாநில சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சேலத்தில் தொடங்கியது;
ஓமலூர் மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி தொடக்கம்: 22 மாவட்டங்களைச் சேர்ந்த 303 வீரர்கள் பங்கேற்பு
சேலம் மாவட்டம் ஓமலூரில் செயல்பட்டு வரும் சாப்ட் டென்னிஸ் அகாடமியில், 16வது மாநில சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி வெகு விமர்சையாக நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் சேலம், மதுரை, திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 303 வீரர் மற்றும் வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் குழு பிரிவுகளில் நடைபெற்று வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் பங்கேற்றதால், ஓமலூரை அடுத்த இரும்பாலை பகுதியில் அமைந்துள்ள சாப்ட் டென்னிஸ் மைதானத்திலும் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய நாளில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா, ஓமலூரில் உள்ள முக்கிய மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி, தமிழ்நாட்டின் சாப்ட் டென்னிஸ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு, விளையாட்டு உற்சாகத்தை எழுப்பும் முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.