விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கவனத்திற்கு
கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை, ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது;
ஈரோடு கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் – ஏப்ரல் 25 முதல் ஆரம்பம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 25 முதல் மே 15 வரை, ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் இந்த முகாம் நடைபெறும்.
இதில், தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பல விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மற்றும் 18 வயதுக்குள் உள்ள அனைத்து சிறுவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பதற்காக ஆதார் கார்டு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சி முடிவில், அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படும். பெயர் பதிவு செய்ய விரும்புவோர், ஏப்ரல் 25ம் தேதி காலை 6:00 மணிக்கு நேரில் வந்து பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு:
மாவட்ட விளையாட்டு அலுவலர் – 74017 03490