இரண்டு பைக்குகள் திடீர் மோதலில் - கட்டடத் தொழிலாளி பலி! கோபியில் பரபரப்பு
பலத்த காயமடைந்த தொழிலாளியை உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார்.;
பைக்குகள் மோதல்: கட்டட தொழிலாளி விபத்தில் பலி :
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 35), கட்டடத் தொழிலாளராக பணியாற்றி வந்தார். அவர், தண்ணீர்பந்தல் புதூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு தனது பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கூத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த தேவராஜ் (40) ஓட்டிய டி.வி.எஸ். ஜஸ்ட் பைக் அவரின் வண்டியில் மோதியது.
இந்த திடீர் விபத்தில் ரவிக்குமார் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.