நாளை கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு நாள்

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் குறைதீர்ப்பு நாள் நிகழ்ச்சி நாளைமணிக்கு அதே அழகாபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது.;

Update: 2025-05-15 10:40 GMT

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு நாள் – நாளை மனுக்கள் வழங்கலாம்

சேலம்: தமிழக சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த 2024 ஜூன் 27ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்க்க, இரு மாதத்திற்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அழகாபுரத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் இதுவரை 5 முறை குறைதீர்ப்பு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று, மொத்தம் 329 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது, ஆறாவது குறைதீர்ப்பு நாள் நிகழ்ச்சி நாளை (16ம் தேதி) காலை 10:30 மணிக்கு அதே அழகாபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது. இதில், சேலம் மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணியாற்றுபவர்கள், ஓய்வுபெற்றோர் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டோர் தங்களுடைய குறைகளை தெளிவாக எழுதி மனுக்களாக அளிக்கலாம்.

அந்த மனுக்கள் சட்ட விதிகளின் கீழ் பரிசீலிக்கபட்டு, உரிய தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News