மின் மயானம் வேண்டாம்– கோபி மக்கள் கலெக்டரிடம் மனு
கோபி நகரில் ஏற்கனவே இரு இடங்களில் மின் மயானம் உள்ளதாள் புதிய மின் மயானம் அமைப்பது தேவையற்றது என பொதுமக்கள் கூறினார்;
மின் மயானம் எங்களுக்குத் தேவையில்லை – கோபி குடிமக்கள் மனுவில் கூறினர்
ஈரோடு: கோபி தாலுகாவில் உள்ள கொளப்பலூர், நஞ்சப்பா காலனி, ஜெ.ஜெ. நகர், சாணார்பாளையம், சாணார்பாளையம் காலனி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு வழங்கினர்.
அவர்கள் மனுவில் கூறியதாவது:
"எங்கள் பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சுடுகாடு செயல்பட்டு வருகிறது. இதுவரை எந்தவித சிக்கலும், எதிர்ப்பும் ஏற்பட்டதில்லை. தற்போது கொளப்பலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், 1.90 கோடி ரூபாய் மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்காக பள்ளவாரி குட்டை பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது."
மேலும் அவர்கள் வலியுறுத்தியதாவது:
கோபி நகரில் ஏற்கனவே இரு இடங்களில் மின் மயானம் உள்ளது. எனவே, எங்கள் பகுதியிலோ, பள்ளவாரி குட்டையிலோ புதிய மின் மயானம் அமைப்பது தேவையற்றது. இது சுற்றுச்சூழலையும், குடிநீரையும் பாதிக்கும். திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்