கட்டுமான பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து ஈரோட்டில் சிவில் இன்ஜினியர்கள் ஆர்ப்பாட்டம்!
போராட்டத்தில் ஈரோடு மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார், செயலாலர் முன்னிலை வகித்தார்.;
ஈரோடு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். செயலர் குமரவெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலைகளை கட்டுப்படுத்தி அரசு நிர்ணயிக்க வேண்டும்
கல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும்
ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும்
கட்டுமான பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்
கட்டட அனுமதி கட்டண உயர்வை குறைக்க வேண்டும்
விவசாயத்திற்கு அடுத்ததாக அதிக வேலைவாய்ப்பு வழங்கும் கட்டுமானத் துறையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த போராட்டம், கட்டுமானத் துறையில் நிலவும் சிக்கல்களை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.