காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய இன்ஸ்பெக்டர் - அதிகார பூர்வமாக பொறுப்பேற்றார்!

காங்கேயம் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனர் மற்றும் வாழ்த்து கூறினர்.;

Update: 2025-05-20 04:10 GMT

காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் பதவி உயர்வுடன் பொறுப்பேற்றார் :

காங்கேயம்:  காங்கேயம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தற்போது மூலனூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் துணை ஆய்வாளராக (S.I.) பணியாற்றி வந்த செல்வநாயகம், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் புதிய பொறுப்பாக காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அவர் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, காங்கேயம் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனர் மற்றும் வாழ்த்து கூறினர்.

Tags:    

Similar News