சிலிண்டர் கேஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மேட்டூர் நகரில் சிலிண்டர் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-04-16 09:40 GMT

மா.கம்யூ. ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மேட்டூர் ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய செயலர் வசந்தி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News