புதுக்கோட்டையில் பாகிஸ்தான் கொடி ஒட்டப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரபு! புதுக்கோட்டையில் பாகிஸ்தான் கொடி ஒட்டியவர்கள் அடையாளம் கண்டுபிடிப்பு - பரபரப்பை ஏற்படுத்திய இருவர் யார்?
அறந்தாங்கி–பட்டுக்கோட்டை பகுதிகளில் பாகிஸ்தான் தேசியக் கொடிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
புதுக்கோட்டையில் பாகிஸ்தான் கொடியால் பரபரப்பு! – இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அடையாளம் கண்டுபிடிப்பு :
புதுக்கோட்டை:
இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கடும் அரசியல் மற்றும் எல்லை பதற்றம் தொடரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் ராஜேந்திரபுரம் மற்றும் அறந்தாங்கி–பட்டுக்கோட்டை பகுதிகளில் பாகிஸ்தான் தேசியக் கொடிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 8 இடங்களில் பாகிஸ்தான் கொடி ஒட்டப்பட்டிருந்தது காவல்துறையைக் கலங்க செய்தது. உடனடியாக போலீசார் அவற்றை அகற்றி, CCTV காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பாசிசம் அல்லாமல் யாராவது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செய்த செயலா? அல்லது தீவிரவாத சூழ்ச்சி எனும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.