வீட்டில் 10 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு பின்னர் கொள்ளை – ஈரோடில் அதிர்ச்சி சம்பவம்!
மர்ம நபர் ஒருவர் 10 நாட்கள் தங்கி, சமைத்து சாப்பிட்டபின் பின் கதவை உடைத்து கொள்ளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ஈரோடில் அதிர்ச்சி சம்பவம்: வீட்டில் 10 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு பின்னர் கொள்ளை :
ஈரோடு ரயில்வே காலனி சாய் பாபா பகுதியில் தங்கியிருந்த வீட்டில், மர்ம நபர் ஒருவர் 10 நாட்கள் தங்கி, சமைத்து சாப்பிட்டபின் பின் கதவை உடைத்து கொள்ளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ரயில்வே காலணி சாய் பாபா பகுதியை சார்ந்தவர் அனில்குமார் .இவரது குடும்பத்தினர் கேரளா மாநிலம் காசர் கூட்டில் வசித்து வருகின்றனர்.கடந்த மே மாதம் ரயில்வே பகுதியில் உள்ள வீட்டில் ஆள் இல்லாததை பயன்படுத்தி 10 நாட்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.
பத்து நாட்கள் அந்த வீட்டில் தங்கிய குற்றவாளி, சமைத்து சாப்பிட்டபின், வீட்டின் பின் கதவை உடைத்து, வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியின் அடையாளம் மற்றும் இருப்பிடத்தை கண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகிறது.