புதிதாகத் திறந்த ரெஸ்டாரன்ட்
சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி எதிரே புது ரெஸ்டாரன்ட் திறப்பு விழா நடைபெற்றது.;
அமோகம் ரெஸ்டாரன்ட், ஸ்வீட்ஸ் திறப்பு
ஓமலூர் ஹென்றி ஊல்சி பேக்கரியின் மற்றொரு அங்கமாக, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி எதிரே அமோகம் ரெஸ்டாரன்ட், ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் கடையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு ஓட்டல் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு ரிப்பன் வெட்டி ரெஸ்டாரன்டைத் திறந்து வைத்தார். ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் பிரிவை கே.பி.என். டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் நடராஜன் தொடங்கி வைத்தார். சமையலறை பிரிவை திரிவேனி நிறுவன தலைவர் பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை நாவல் பிராப்பர்ட்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவன இயக்குனர் பிரேமலதா கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் சேலம் ஏரோ பார்க் சுந்தரம், எஸ்.கே.எஸ். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், செந்தில் பப்ளிக் பள்ளி நிறுவனர் கந்தசாமி, நியூ ஹென்றி ஊல்சி நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார், சித்திரைச்செல்வி, சரவணக்குமார், சுஜிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதிய ரெஸ்டாரன்ட் குறித்து சதீஷ்குமார் கூறுகையில், குளிரூட்டப்பட்ட சூழலில் ஒரே நேரத்தில் 140 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். மேலும், 250 பேர் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட விழா அரங்கமும் உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவதானிய தோசை, வாழைப்பூ மசால் தோசை, பனானா பிளேவர் மசாலா தோசை உள்ளிட்ட ஆரோக்கியம் மற்றும் சத்தான பல்வேறு உணவு வகைகள் இங்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.