225 கிராமங்களில் ஒரே நேரத்தில் கிராம சபை கூட்டம் – கலெக்டர் தலைமையில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடம்பூரை அடுத்த குன்றி மலை கிராமத்தில் உள்ள ஆர்.சி. உயர்நிலை பள்ளியில், கிராம சபை கூட்டம் நேற்று (மே 1) சிறப்பாக நடைபெற்றது;

Update: 2025-05-02 05:50 GMT

மலைக் கிராமங்களில் கிராம சபை கூட்டம்: 

ஈரோடு மாவட்டம்: கடம்பூரை அடுத்த குன்றி மலை கிராமத்தில் உள்ள ஆர்.சி. உயர்நிலை பள்ளியில், கிராம சபை கூட்டம் நேற்று (மே 1) சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும் உள்ள 225 கிராமங்களில் இன்று கிராம சபை கூட்டங்கள் நடந்துள்ளன. மே 9ஆம் தேதி, இப்பகுதியில் தாசில்தார் மூலம் பொதுமக்களுக்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் திருத்தம், வன உரிமை பட்டா மாறுதல், வாரிசு சான்று போன்ற அரசுத் திட்ட சேவைகள் வழங்கப்படும். மக்களை இவ்வசதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம், என்றார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மருத்துவமனை வசதி, குடிநீர் தட்டுப்பாடு, சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் மனு மூலம் வழங்கினர்.

அதேபோல, சென்னிமலை ஒன்றியத்துக்குட்பட்ட 22 ஊராட்சிகளில் – முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை, கொடுமணல், பசுவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டங்கள், சுகாதாரம், சாலை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், அந்தியூர் அருகே பர்கூர் ஊராட்சியில், பர்கூர் உறைவிட பள்ளியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராம சபையில் கட்டட அனுமதி, சுய சான்று வழங்கல், பசுமை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News