நான் முதல்வன் தேர்வு பயிற்சிக்கு, கல்வி இலவசம், பயிற்சி இலவசம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
அரசுப் பணிக்கு இலவச பயிற்சியை நாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிட வேண்டாம் என அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.;
நான் முதல்வன் தேர்வுக்கு அழைப்பு அரசு பணிக்கான இலவச பயிற்சி வாய்ப்பு
ஈரோடு: தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், எஸ்.எஸ்.சி, ரயில்வே (RRB), வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு, மாநிலம் முழுவதும் மே 31ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு அரசு சார்பில் 6 மாத இலவச பயிற்சி, தங்கும் இடம், உணவு போன்ற சலுகைகள் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த நுழைவுத்தேர்வு இரண்டு மையங்களில், ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் மற்றும் 21 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 13, விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.naanmudhalvan.tn.gov.in
அரசுப் பணிக்கு இலவச பயிற்சியை நாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிட வேண்டாம் என அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.