கோபியில் லாரி விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
பஜாஜ் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டுநர் எதிரே வந்த வேகமான லாரியில் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார்.;
கோபியில் லாரி விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
கோபி:
கோபி அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்த கார்த்தி (39), ஆம்னி வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 5ம் தேதி மாலை 6:30 மணியளவில், தனக்கு சொந்தமான பஜாஜ் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த அவர், எதிரே வந்த வேகமான லாரியுடன் மோதி படுகாயமடைந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக கோவையின் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கார்த்தியின் தந்தை மாணிக்கம் (69) கொடுத்த புகாரின் பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.