விளையாட்டு போட்டியில் மாநில அளவுக்குச் செல்லும் வாய்ப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை பெற மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நேற்று (மே 7) நடைபெற்றது.;
விளையாட்டு போட்டியில் மாநில அளவுக்குச் செல்லும் வாய்ப்பு
ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை பெற மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நேற்று (மே 7) நடைபெற்றது. இதில், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்பு வரை படிக்கும் 110 மாணவ-மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழு வழிகாட்டல் வழங்கினர். தேர்வு வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவில் மே 19-24 வரை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்றும், அதில் வெற்றி பெறுவோருக்கு கவுன்சிலிங் மூலம் விளையாட்டு விடுதி சேர்க்கை வழங்கப்படும் என்றும் அலுவலர் தெரிவித்தார்.
இன்று (மே 8) மாணவியர்களுக்கான தேர்வுப் போட்டி நடைபெற உள்ளது.