ஒரே வாரத்தில் மூவர் மாயம்
இளம்பெண் மாணவி முதியவர் மூவர் மாயம் ஈரோட்டில் தொடரும் மர்மங்கள்;
இளம்பெண், மாணவி உள்பட மூவர் மாயம்
இளம்பெண், மாணவி உள்பட மூவர் மாயம்ஈரோடு: ஈரோடு, அடுக்குப்பாறை பகுதியை சேர்ந்த செல்வம் மகள் பிரீத்-திகா, 19; கடந்த, 4ம் தேதி காலை, வீட்டின் அருகேயுள்ள கடைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. தாய் உமாபுகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
* கொடுமுடி, வெள்ளியணை காட்டூரை சேர்ந்த சுப்பிரமணி மகள் நந்தினி, 17; பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ளார். வேலைக்கு செல்வது தொடர்பாக தாய்-மகள் இடையே பிரச்னை இருந்தது. கடந்த, 5ம் தேதி காலை பாட்டி வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால், பாட்டி வீட்-டுக்கு போகவில்லை. தாய் தனலட்சுமி புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வருகின்றனர்.* சித்தோடு அருகே நடுப்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ்-குமார், 32; பிளாஸ்டிக் கவர் கம்பெனி வைத்துள்ளார். இவரின் தாயார் விஜயலட்சுமி, 55; நேற்று முன்தினம் வேலைக்கு சென்று-விட்டு மாலையில் லோகேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் தாயார் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க-வில்லை. அவரது புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்-றனர்