தீவிபத்தில் 10 வயது மாணவன் மரணம்

பவானி அருகே10 வயது மாணவனின் மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2025-04-15 07:00 GMT

பவானி அருகே அம்மாபேட்டை அருகிலுள்ள நெரிஞ்சிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வத்தின் மூத்த மகனான கோகுலகண்ணன் (வயது 10), அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

ஏப்ரல் 6ஆம் தேதி இரவு மழையுடன் மின் வெட்டும் ஏற்பட்ட நிலையில், வீட்டு மண்ணெண்ணெய் விளக்கு தவறி தூங்கிக்கொண்டிருந்த கோகுலகண்ணன் மீது விழுந்தது. இதனால், அவரது உடலில் தீப்பற்றியது. சம்பவத்தை பார்த்த பெற்றோர் பதற்றத்தில் பிள்ளையை மீட்டு உடனே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீயில் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்ற வந்த சிறுவன், பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News