சேலத்தில் லாரி மோதி முதியவர் பலி
65 வயதான கூலித் தொழிலாளி ராமசாமி லாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
லாரி மோதி முதியவர் பலி
ராசிபுரம்: வெண்ணந்தூர், நெ.3. கொமராபாளையம், கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்த 65 வயதான கூலித் தொழிலாளி ராமசாமி லாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையையொட்டி தனது 16 வயது பேத்தி லாவண்யாவை உறவினர் வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அத்திபலகானூர் அருகே எம்.சாண்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி, ராமசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராமசாமியின் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் அவர் கடுமையாகக் காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ராமசாமியின் பேத்தி லாவண்யா காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.