ஈரோட்டில் 35-வயது ஐ.டி. பொறியாளர் தற்கொலை
வேலை அழுத்தத்தின் இருண்ட ரகசியம், ஒரே நாளில் சாவுக்குத் தள்ளிய ஐ.டி. வாழ்க்கை;
ஐ.டி. நிறுவன ஊழியர் மன உளைச்சலில் தற்கொலை
ஈரோடு: ஈரோடு வாய்க்கால்மேடு, இந்தியன் நகர் முதலாவது வீதியை சேர்ந்த சீராளனின் மகன் பிரவீன் (35), எம்.இ. பட்டதாரி ஆவார். திருமணம் ஆகாத அவர், பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வீட்டிலிருந்தே பணிபுரிந்த அவர், மன உளைச்சலால் யாருடனும் பேசாமல் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வாக்கிங் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற பிரவீன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை தேடியபோது, அருகிலுள்ள கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள ஒரு கிணற்றின் பக்கத்தில் அவரது செருப்பு கிடப்பதை கண்டனர். இதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் பெற்ற போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து தேடி, பிரவீனை சடலமாக மீட்டனர். மன உளைச்சலால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்தனர்.