ஈரோடு மாவட்டத்தில் குவாரி குத்தகைக்கு விண்ணப்பம் தொடக்கம்

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்;

Update: 2025-04-09 05:40 GMT

ஈரோடு மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமத்திற்கு ஆன்லைன் விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, நம்பியூர், சத்தி மற்றும் தாளவாடி உள்ளிட்ட தாலுகாக்களில் கிராவல், சாதாரண கற்கள், கிரானைட், குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார் போன்ற கனிமங்களை அகழ்வதற்கான குவாரி குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உரிமங்களுக்கு தேவையான வழித்தட சீட்டுகளை பெற, வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை அகழ்வதற்கான குவாரி உரிமைகளுக்கும், இந்நாள் முதல் அதே இணையதளத்தின் வாயிலாகவே விண்ணப்பங்கள் பெறப்படுவதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News