பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா - கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல்! பாரம்பரிய நிகழ்வு! பக்தர்கள் உற்சாகம்

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் அமைந்துள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மே 14ஆம் தேதி தொடங்கியது.;

Update: 2025-05-22 06:20 GMT

பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா – பக்தர்களின் உற்சாகம் :

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் அமைந்துள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மே 14ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, கம்பம் சுற்றி விளையாடுதல், ஆபரண பெட்டி எடுத்து வருதல், கரகம் பாலித்து சக்தி அழைத்தல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து படைத்தல், மாவிளக்கு பூஜை, கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் மற்றும் சப்பரத்தில் வீதி உலா ஆகியவை இடம்பெற்றன. விழாவின் இறுதிநாளில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைந்தது

Tags:    

Similar News