ரூ.40,000 கோடியில் பின்னலாடை ஏற்றுமதி சாதனை

ஆடைத் துறையில் 2024-25ம் நிதியாண்டில் ரூ.40,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனையை எட்டியுள்ளனர்;

Update: 2025-04-17 05:50 GMT

திருப்பூர் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள், தற்போது மகிழ்ச்சியுடன் உள்ளனர். காரணம், இந்த துறை 2024-25ம் நிதியாண்டில் ரூ.40,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே, சர்வதேச சந்தையில் உருவான புதிய வாய்ப்புகள், இந்த வளர்ச்சிக்கு வித்திட்டன. இதன் விளைவாக, திருப்பூரின் பின்னலாடைத் துறை வேகமான வளர்ச்சி பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.1.35 லட்சம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் திருப்பூர், தனக்கென ஒரு முக்கிய பங்குகளை வகித்துள்ளது.

40 ஆயிரம் கோடி ரூபாயின் வர்த்தக இலக்கை எட்டிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தற்போது அடுத்த இலக்கை நோக்கி திட்டமிடத் தொடங்கியுள்ளனர். இந்த வளர்ச்சி, திருப்பூரை உலகத் சந்தையில் மேலும் வலுவாக நிலைநாட்டும் என்ற நம்பிக்கையுடன் தொழில்துறையினர் உள்ளனர்.

Tags:    

Similar News