நடனம், நாட்டியம், திருக்குறளால் மிளிர்ந்த ஆண்டு விழா

முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாட்டபட்டது;

Update: 2025-04-21 04:30 GMT

ஈரோடு மாவட்டம், பெருந்துறை யூனியனில் உள்ள முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா செம்மையாக நடைபெற்றது. விழா நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியையர் உமாதேவி ஆண்டறிக்கையை வாசித்து தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர் பயிற்றுநர் லட்சுமி தலைமை ஏற்றார்.

நிகழ்ச்சியில் பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகள் கலாசார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு பாராட்டைப் பெற்றனர். அவர்களின் நடனம், நாட்டியம், திருக்குறள் ஒப்புவித்தல், ஆங்கிலக் கதையாடல் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்மறக்க வைத்தன.

விழா முடிவில் மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நினைவுப்பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவின் இறுதிக்கட்டத்தில் உதவியாசிரியை ரதி நன்றியுரை வழங்கி அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News