உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக தொடக்கம்

உச்சிமாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது;

Update: 2025-04-17 07:10 GMT

உடுமலை, மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் அரியநாச்சிபாளையம் புதூர் மடத்தில் எழுந்தருளியுள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா ஏப்ரல் 21ம் தேதி விநாயகர் பொங்கலுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

திருவிழா நிகழ்ச்சிகள் வருமாறு நடைபெறவுள்ளன:

ஏப்ரல் 21: விநாயகர் பொங்கல் வழிபாட்டுடன் விழா துவக்கம்

ஏப்ரல் 22: துர்க்கையம்மனுக்கு வடிசோறு நிகழ்ச்சி

ஏப்ரல் 23: இரவு மினியப்பன் பொங்கல் மற்றும் உச்சிமாகாளியம்மன் சாட்டுதல் விழா

ஏப்ரல் 29: அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு அம்மன் அழைத்தல், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள்

ஏப்ரல் 30: பூவோடு எடுத்தல், மாவிளக்கு, பொங்கல் திருவிழா

மே 1: பொது அபிஷேகம்

இந்த திருவிழாவை ஒட்டி பக்தர்கள்  திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வண்ணமயமான ஆன்மிக நிகழ்ச்சிகள், பூஜைகள், நேர்த்திக்கடன்கள் ஆகியவற்றுடன், அம்மனின் அருளைப் பெற்றுக் கொள்ள மக்கள் உற்சாகமாக கலந்து கொள்வார்கள் என ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News