காதல் மனைவியை கொன்று சடலத்தின் அருகே தூங்கிய கணவன்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவனின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-05-05 04:00 GMT

பவானியில் காதல் மனைவியை கொன்று சடலத்தின் அருகே தூங்கிய கணவன் 

ஈரோடு மாவட்டம் பவானியில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காதல்மனையை கழுத்தை நெரித்து கொன்ற கணவன், அதுபற்றி தெரியாமல் சடலத்துடன் ஒரு இரவு முழுவதும் தூங்கிய சோகமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானியை சேர்ந்த சூரியபிரபா (24) என்பவர், கூலி தொழிலாளியான கார்த்திக் (24) என்பவருடன் மூன்று மாதங்களுக்கு முன் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பவானியில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு கார்த்திக், மதுபோதையில் வீடு திரும்பினார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் கார்த்திக் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றார். அதன்பின்னர், சம்பவம் அரங்கேறியது கூட தெரியாமல், சடலத்தின் அருகில் தூங்கி விட்டார்.

மறுநாள் காலை மனைவியை எழுப்ப முயன்ற போது எந்தவித எதிர்வினையும் இல்லாததால், சூரியபிரபாவை பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் சூரியபிரபா ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

போலீசார் விசாரணையில், கார்த்திக் வழங்கிய தகவல்களில் முரண்களைக் காணத்தொடங்கினர். பின்னர் நடத்திய தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News