பத்தாம் வகுப்பு பொது தேர்வு நிறைவடைந்தது, மாணவர்கள் மகிழ்ச்சி

சேலத்தில் கேக் வெட்டி ரிலாக்ஸ் ஆன மாணவ, மாணவிகள்;

Update: 2025-04-16 09:30 GMT

பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. சேலம் மாவட்டத்தில் 522 பள்ளிகளைச் சேர்ந்த 41,450 மாணவ-மாணவியர் இத்தேர்வில் பங்கேற்றனர். நிறைவு நாளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்த வினாக்களும், பாடப்புத்தகத்தின் பின்புறத்தில் உள்ள வினாக்களுமே கேட்கப்பட்டிருந்ததால், அதிக மாணவர்கள் நூற்றுக்கு நூறு ('செண்டம்') மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தேர்வுகள் முடிவடைந்ததையொட்டி, சேலம் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் தேர்வு மையங்களில் இருந்து வெளியேறி, தங்கள் நண்பர்களுடன் கேக் வெட்டியும், ஒருவர் முகத்தில் ஒருவர் வண்ணப் பொடிகளைப் பூசியும், நண்பர்களின் சட்டைகளில் மை அடித்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News