கபடி பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு

கபடி விளையாட்டுக்கான ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என அறிவித்தனர்;

Update: 2025-04-16 04:10 GMT

ஈரோட்டில், கபடி விளையாட்டுக்கான விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதத்திற்கு 25 நாட்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சிக்கான கபடி பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு டிபன், பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடை வழங்கப்படும். மாத ஊதியம் ₹25,000 வழங்கப்படும். பணி காலம் 11 மாதங்கள் ஆகும்.

விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக, கீழ்க்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று அவசியம்:

இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஓராண்டு டிப்ளமோ சான்று

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விளையாட்டு பயிற்சியில் முதுநிலை பட்டயம்

குவாலியர் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் விளையாட்டு பயிற்சியில் முதுகலை டிப்ளமோ

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: ஏப்ரல் 20

நேர்முகத் தேர்வு தேதிகள்: ஏப்ரல் 24 மற்றும் 25

வீரர், வீராங்கனைகள் தேர்வு தேதி: ஏப்ரல் 28 – இடம்: ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கு

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு: 74017-30490 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News