வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

பனமரத்துப்பட்டியில் வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை;

Update: 2025-04-15 09:00 GMT

வனதுர்க்கை அம்மன் கோவிலில் வழிபாடு

பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த நாழிக்கல்பட்டி ஊராட்சியில் கோட்டை கரடு அருகே அமைந்துள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையின் போது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்கள் துர்க்கை அம்மன் மற்றும் நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். குறிப்பாக, திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பெண் பக்தர்கள் எலுமிச்சையில் நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்தனர். வனதுர்க்கை அம்மன் கோவில் இப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய ஆலயமாக திகழ்வதால் சிறப்பு பூஜை நாட்களில் வெகுதூரத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பூஜைகள் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News